Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்திற்கு பிறகு 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் ரியல் சம்பவம் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மகிழ் திருமேனியின் ஐந்தாவது இயக்குனரான விடாமுயற்ச்சியில் அஜித் குமார் நடிக்கிறார், இது லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவுடன் ஒரு அதிவேக அதிரடி திரில்லர் என்று வர்ணிக்கப்படுகிறது. அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கிய படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடஅமுயற்சியின் வரவிருக்கும் அட்டவணை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிப்ரவரி 9 ஆம் தேதி லால் சலாம் வெளியான பிறகு அடுத்த மாதம் தொடங்கி அடிக்கடி புதுப்பிப்புகளை வழங்க லைகா புரொடக்ஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது.வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்த படம், மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். துணிவு படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்த படத்தில் அஜித் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்தப்படம் தொடர்ந்து தாமதமானது. கடந்த ஆண்டு கடந்த மே மாதத்தில் இவரது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

தொடர்ந்து படத்தின் சூட்டிங் தாமதமான நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வந்தனர். இந்த மாதத்திலேயே படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அசர்பைஜானில் ஏற்பட்ட பனி மழை காரணமாக படத்தின் ஷூட்டிங்கை அங்கு தொடர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசர்பைஜான் சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.நடிகர் அஜித்: நடிகர் அஜித் 30 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார். அவரது படங்களில் சமூக அக்கறையும் இணைந்து ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலையொட்டி அவரது துணிவு படம் வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் இருந்த நிலையில் படம் ரசிகர்களை சிறப்பாக கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியது. வெற்றி படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

விடாமுயற்சி படம்: ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது படமாக ஹாட்ரிக் வெற்றியை துணிவு படம் கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது ஏகே 62 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியிலேயே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது விடாமுயற்சி படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கியது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடந்து வந்த நிலையில் அங்கும் ஷூட்டிங்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

சூட்டிங் தாமதம்: அசர்பைஜானில் தொடர்ந்து பனிமழை பொழிந்து வந்த நிலையில் ஷூட்டிங் முடித்துக்கொண்டு தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துனிசியாவில் இந்த மாத இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்த இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சென்னையில் 5% ஷூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்: அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதத்தால் படத்தின் ரிலீசும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முன்னதாகவே விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் அஜித் இணையவுள்ளார். இதனிடைய விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் அல்லது 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லியோ படம் தற்போது ரஜினியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் எப்போது தல அஜித்தின் படத்தை இயக்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அல்டிமேட் அப்டேட் கொடுத்திருக்கிறார்.அதாவது அஜித்துடன் இணைவீர்களா? என்ற கேள்வி லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அஜித்துடன் இணைய எனக்கும் ஆசை தான். அப்படி அவருடன் கூட்டணி அமைந்தால் நிச்சயம் அந்த படம் தீனா மாதிரி தான் இருக்கும் என்று லோகேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவ்வாறு லோகேஷ் அஜித் கூட்டணியில் அடுத்த படம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அஜித்தும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு லோகேஷ்க்கு அஜித் வாய்ப்பு தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை ரசிகர்களும் விரும்புவதால் நிச்சயம் அஜித் இதைப் பற்றி யோசித்து, லோகேஷின் படத்தில் நடிக்க கமிட் ஆகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 171 படத்தில் கெஸ்ட் ரோலுக்கு அஜித்தை கமிட் செய்ய லோகேஷ் விரும்பினாராம் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி அல்லது மார்ச் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாதத்தில் பிரமாண்டமாக வெளியிடப்படும் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன. விடாமுயர்ச்சிக்கான அஜர்பைஜான் கால அட்டவணையின் வெற்றிகரமான முடிவை சமீபத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அஜித் குமார் மற்றும் குழுவினர் அஜர்பைஜானில் ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பை செலவிட்டனர், படப்பிடிப்பு இடத்தில் இருந்து முக்கிய நடிகரின் வழக்கமான காட்சிகள் பகிரப்பட்டன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT