அஜித்குமார் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கினார். ஒரு அட்டவணை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார். இப்போது, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் அடுத்த ஷெட்யூலுக்காக ஏகே மற்றும் படக் குழு மீண்டும் அஜர்பைஜானுக்குச் செல்வதாகக் கேள்விப்படுகிறோம்.70 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் ஒரு ரோட்-ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார் ஸ்டைலான சேஸிங் சீக்வென்ஸில் நடிப்பதாக கூறப்படுகிறது. முழுப் படப்பிடிப்பையும் 2024 ஜனவரி இறுதிக்குள் முடித்து, தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார். அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன கதை? விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படம் பக்கா ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனியும் ஆக்ஷன் காட்சிகளை எடுப்பதில் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தி க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகூட அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் புகைப்படம் அஜர்பைஜான் ஷெட்யூலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அஜித் லைன் அப்அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது
விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் – அஜித் இந்நிலையில், தொடர்ந்து லைன் அப் வைத்திருக்கும் அஜித், வெற்றிமாறனுடன் இணையப்போவதாக பேசப்பட்டு வருகிறது. திரை வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு எழுந்துகொண்டு இருக்கிறது.
ஆம், அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகப்போகிறது. வெற்றிமாறன், அஜித் அவர்களை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதையில் நடிக்க தல சம்மதம் சொன்னதாகவும். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட் ரெட் குமார் தான் தயாரிக்க போகிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், த்ரிஷா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.
