கோலிவுட் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது வரவிருக்கும் அதிரடி படமான விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பில் மூழ்கி இருக்கிறார். இப்படத்தில் அஜித்தின் காதலியாக திரிஷா கிருஷ்ணன் நடிக்கிறார்.

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து, விடா முயற்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக்கை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிலுவையில் உள்ளது.


அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது. அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.


விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


இந்நிலையில் அஜர்பைஜானில் நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஒருமுறை மணற்புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் பணிப்புயல் காரணமக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளதாம். இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டின் சிலிபஸ் என்ற நாட்டில் நடக்க உள்ளது. அஜர்பைஜான் நாட்டின் லொகேஷன்களுக்கு இணையான லொகேஷன்கள் அந்த நாட்டில் உள்ளதால் அங்கு ஷூட்டிங் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.


இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் சர்ஜா மற்றும் ஆரவ் ஆகியோரும் நடித்துள்ளனர், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.
