நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பது என முடிவெடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும். விடாமுயற்சி படம் முடிந்த பிறகு, அடுத்ததாக அவர் ஏகே 63 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ஏகே 63 படம் ஏப்ரல் மாதமே தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பது என முடிவெடுத்ததற்கு பின்னணி என்ன?
அஜித்குமாருக்கு படம் நடிப்பதில் ஆர்வம் இல்லை, சினிமாவை விட்டு விலகப் போகிறார், வெளிநாட்டில் செட்டிலாக போகிறார் என நிறைய வதந்திகள் வெளியானது. அது அத்தனைக்கும் பதிலளிக்கும் விதமாக அஜீத் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். தன் மீது அதீத நம்பிக்கை மற்றும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு.
நடிகர் விஜய் அரசியல் பணிகளுக்காக தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து இரண்டு வருடங்கள் பிரேக் எடுக்க போகிறார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சமயத்தில்தான் அஜித் வருஷத்துக்கு இரண்டு படம் என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். இது நடிகர் விஜய்யின் பிரேக் எடுக்கும் முடிவை எந்த அளவில் மாற்றம் என்பது இனி தான் தெரியும்.
அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கும் ஒரு வரப்பிரசாதம். அஜித் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பதால், தமிழ் சினிமாவின் தரத்திற்கும், வசூலுக்கும் இது ஒரு நல்ல சாதனையாக அமையும்.
