தமிழ் ஸ்டைலிஷ் நடிகரான அஜீத், இயக்குனர் மகிழ திருமேனியுடன் இணைந்து ‘விடாமுயற்சி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, அஜர்பைஜானின் அட்டவணை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.மேலும், குழு அடுத்ததாக லண்டன் செல்லும் என கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விடாமுயற்ச்சி’ முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இது அஜித்தின் ஸ்டைலிஷ் அவதாரமாக இருக்கும்.விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் இந்த படம் இந்த கோடையில் பெரிய திரைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ‘விடாமுயற்சி’ படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர படக்குழு விவரங்களை தயாரிப்பாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன். தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தைக் கொடுத்ததன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அதன் பிறகு காதலின் வலியை உணர்வுப்பூர்வமாக காட்டிய 7ஜி ரெயின்போ காலனி படத்தால் இளைஞர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்.
அதுவரை காதல் கதைகளையே கொடுத்து வந்த செல்வராகவன் திடீரென ஆயிரத்தில் ஒருவன் என்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுத்து அசற வைத்தார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வரலாற்று பின்னனியில் உருவான அந்தப் படத்திற்கு ரிலீஸ் ஆன நேரத்தை விட இப்போது தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் தனுஷை வைத்து புதுப்பேட்டை என்ற ஒரு ஆக்ஷன் படத்தையும் கொடுத்து நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றார் செல்வராகவன். இயக்குனராக சாதித்த செல்வராகவன் அடுத்ததாக நடிகராகவும் களம் இறங்கினார். குணச்சித்திர வேடத்தில் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார். சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கி நடிக்கும் தனது 50வது படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணனை இயக்கும் மகிழ்ச்சியில் தனுஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய செல்வராகவனிடம் தொகுப்பாளர் அஜித் ரசிகர்கள் எப்பொழுது அஜித்தை வைத்து படம் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள் என கேட்டார்.அதற்கு பதிலளித்த செல்வராகவன் அஜித்தை வைத்து படம் எடுக்க மூன்று முறை வாய்ப்புகள் வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை போன்ற சில பல பிரச்சினைகளால் அது நடக்காமல் போய்விட்டது. அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு அரசியல் தலைவராக அஜித்தை நடிக்க வைத்து பார்க்க வேண்டும் என்று ஆசை என கூறினார் செல்வராகவன். மேலும் நான் பார்த்த மனிதர்களிலேயே அஜித் மிகவும் இனிமையானவர் என்றும் கூறினார்.
விடாமுயற்சி’ படத்தின் அடுத்த ஷெட்யூல் தொடங்கும், மேலும் முக்கிய ஷெட்யூலுக்காக டீம் லண்டன் புறப்படும் என்று கூறப்படுகிறது. ‘விடாமுயற்ச்சி’ படத்தில் அஜீத் தனது கதாபாத்திரத்திற்கு ஸ்டைலாக நடிக்கிறார், மேலும் படம் ஒரு சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர், மேலும் படத்தின் படப்பிடிப்பு சீராக நடந்து வருகிறது.
