Wednesday, October 28, 2026

இனி அஜித்துக்கு ஏறு முகம் தான் !அஜித்தை பற்றி புட்டு புட்டு வைத்த பிரபலம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.

அஜித்தின் ஜாதகத்தை வைத்து கணித்த இந்த ஜோதிடர், வெள்ளை நிறத்துடன் இருக்கும் நடிகர்கள் குறிப்பாக அஜித் வரும் ஆண்டில் மேலும் புகழ்பெறுவார் என்று கூறியுள்ளார். அஜித் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருப்பதால் அவருக்கு நேரம் அமோகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

குறிப்பாக மார்ச் 7 முதல் ஏப்ரல் 24 க்குள் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸானால் படம் பெரும் வரவேற்பை பெறுமாம். ப்ளாக்பஸ்டர் ஹிட்டடிக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஜோதிடர் கூறினார்.

பொதுவாகவே அஜித் செண்டிமெண்டை அதிகம் எதிர்பார்ப்பவர்தான். வியாழக்கிழமைகளில்தான் தன் படத்தை ரிலீஸ் செய்ய விரும்புவார். படம் ஆக்‌ஷன் படமாகவே இருந்தாலும் அதில் ஒரு சின்ன செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாக வேண்டும் என்று நினைப்பார்.

இந்த ஜோதிடர் கூறிய விஷயங்கள் அஜித்தின் காதுக்கு சென்றால் அதற்கேற்ப அவர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை ரிலீஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த செய்தியை கேட்ட அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி, அஜித் மேலும் பிரபலமாக வேண்டும் என்று அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT