Wednesday, October 28, 2026

மூன்று பெரிய மலை உடன் மோதும் அஜித் ! சாரே இது கொல மாஸ்! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதைப்படி, அஜித் மற்றும் த்ரிஷா கணவன் மனைவியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வெளிநாட்டிற்கு டூர் செல்லும்போது, த்ரிஷா வில்லன்களால் கடத்தப்படுகின்றார். அவரை அஜித் கண்டுபிடிப்பது தான் படத்தின் ஒரு வரி கதையாகும்.

ADVERTISEMENT

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு 75% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அஜித்தின் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அஜித்தை சந்தித்த பாவனா

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித்தை பிரபல நடிகை பாவனா சந்தித்து பேசியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நாயகியாக வலம் வரும் பாவனா அஜித்துடன் அசல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பாவனா ஒரு வேலைக்காக அஜர்பைஜான் சென்றிருந்த நிலையில் அஜித்தை விடாமுயற்சி படப்பிடிப்பில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அஜித், நீங்க இங்க இருப்பது தெரியும், இருந்தாலும் உங்களை சந்திக்க லேட் ஆகிவிட்டது, ரொம்ப சாரி என அவரிடம் மன்னிப்பு கேட்டாராம் அஜித்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னர் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் விக்டராக வந்து மிரட்டி எடுத்த ”அருண் விஜய்” இப்படத்தில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகயுள்ளார் என்றும் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் கதாநாயகனாக ”அருள்நிதி” நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு நியூ இயர் அன்று தேதி வெளியாகும் என்றும் படம் தீபாவளிக்கு திரையரங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT