Wednesday, October 28, 2026

யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் அஜித் போய் பார்த்த படம் ! ஹீரோ யாருன்னு தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சரண் இடையே நீண்டகால நட்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம், அசல் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். இந்த படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே மிகவும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில், அஜித் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “அசல் படத்தில் அமைந்த பாடல்களை எல்லாம் விஜய்க்கு போட்டு காண்பித்தாராம் அஜித். வெளியில் ரசிகர்கள் சொல்வதை போல் விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே எந்தவொரு விரோதமும் போட்டியும் இல்லை. அவர்களுக்குள் ஒரு இணக்கமான நட்பு இருந்து வருகிறது” என்று கூறினார்.

ADVERTISEMENT

மேலும், “மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ என்ற படத்தை சரணும் அஜித்தும் திரையரங்கிற்கு சென்று பார்த்தார்களாம். அஜித்தை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக மாறு வேடத்தில் வந்து பார்த்தாராம். படத்தை பார்த்து படம் முடியும் வரை அஜித் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தாராம். அதன் பின் படம் முடியும் ஒரு 5 நிமிடத்திற்கு முன்பே அஜித் கிளம்பி விட்டாராம்” என்று சரண் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் அஜித் மற்றும் சரண் இடையே உள்ள நெருங்கிய நட்பு குறித்து புதிய வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT