Wednesday, October 28, 2026

தளபதி விஜய்யால் அஜித்தின் மார்க்கெட்டை அசைக்கக்கூட முடியாது.. பிரபல இயக்குனர் சவால்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் இரண்டு துருவங்களாக உள்ள அஜித் மற்றும் விஜய் இருவரின் மார்க்கெட்டும் இப்பொழுது உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், பிரபல இயக்குனர் முரளி அப்பாஸ் அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ் சினிமாவைப் பொருத்தவரையிலும் இப்போது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் விஜய், அஜித்க்கு உள்ளது. ஒரு காலத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு இனி எல்லாமே சிவாஜிதான் என பலரும் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு சிவாஜி தொடர்ந்து கௌரவ வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் ரஜினி கமல் என்ற இரு வல்லவர்கள் தமிழ் சினிமாவை ஆண்டார்கள்.

“அதேபோல், விஜய் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்தாலும் அஜித் மார்க்கெட்டை நீக்கவோ குறைக்கவோ முடியாது. ஏன் அசைக்கக்கூட முடியாது. அஜித் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அந்த ரசிகர்கள் அவரது படங்களை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

“அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் இரு கண்கள். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் செய்தாலும், ரசிகர்கள் இருவரையும் கொண்டாடுவார்கள். இந்த இரண்டு நடிகர்களின் படங்களும் வெற்றி பெறும். தமிழ் சினிமாவின் நல்ல காலம் இன்னும் நீடிக்கும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT