Wednesday, October 28, 2026

அஜித்திடம் இருந்து பிரபல உச்ச இயக்குனருக்கு பறந்த ஃபோன் கால்! ஒரு வேளை இருக்குமோ? எதிர் பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயர்ச்சி இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். வெற்றிகரமான வணிகப் படங்களை இயக்கி சாதனை படைத்த மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும், இப்படம் ஆக்‌ஷன் ஜானரில் இருப்பதாகவும், இதில் அஜித்குமார் சிறந்து விளங்குவதாகவும் கூறப்படுகிறது.

மங்காத்தா நடிகரை தவிர, படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், அர்ஜுன் சர்ஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யூகங்களின்படி, சஞ்சய் தத்தும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் காத்திருக்கிறது.

ADVERTISEMENT

நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்த படம், மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். துணிவு படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்த படத்தில் அஜித் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்தப்படம் தொடர்ந்து தாமதமானது. கடந்த ஆண்டு கடந்த மே மாதத்தில் இவரது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படத்தின் சூட்டிங் தாமதமான நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வந்தனர். இந்த மாதத்திலேயே படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அசர்பைஜானில் ஏற்பட்ட பனி மழை காரணமாக படத்தின் ஷூட்டிங்கை அங்கு தொடர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசர்பைஜான் சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் 30 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார். அவரது படங்களில் சமூக அக்கறையும் இணைந்து ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலையொட்டி அவரது துணிவு படம் வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் இருந்த நிலையில் படம் ரசிகர்களை சிறப்பாக கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியது. வெற்றி படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

விடாமுயற்சி படம்: ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது படமாக ஹாட்ரிக் வெற்றியை துணிவு படம் கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது ஏகே 62 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியிலேயே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது விடாமுயற்சி படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கியது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடந்து வந்த நிலையில் அங்கும் ஷூட்டிங்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

சூட்டிங் தாமதம்: அசர்பைஜானில் தொடர்ந்து பனிமழை பொழிந்து வந்த நிலையில் ஷூட்டிங் முடித்துக்கொண்டு தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துனிசியாவில் இந்த மாத இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்த இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சென்னையில் 5% ஷூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்: அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதத்தால் படத்தின் ரிலீசும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முன்னதாகவே விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது அஜித் குமார் “கே.ஜி.எஃப்” இயக்குனரான பிரசாந்த் நீலுக்கு தொடர்புகொண்டு நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார். பிரசாந்த் நீல் அஜித்தின் தீவிர ரசிகராம். அஜித்தே தொடர்புகொண்டு “படம் பண்ணலாமா?” என்று கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.

ஆனால் தற்போது பிரசாந்த் நீல் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளாராம். ஒரு படத்தை முடிக்க எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும், ஆதலால் இப்போது அவரால் அஜித்தை வைத்து படம் இயக்கமுடியாத சூழலில் இருக்கிறாராம்.

இதனை அஜித்திடம் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதற்கு அஜித்குமார், “சரி, நாம் சில வருடங்களுக்குப் பிறகு இதை பற்றி பேசலாம்” என்று கூறினாராம். ஒருவேளை “ஏகே 63” அல்லது “ஏகே 64” திரைப்படத்தில் அஜித், பிரசாந்த் நீலுடன் கைக்கோர்க்க வாய்ப்பிருக்கலாமோ!!

காத்திருக்கின்றனர். பல நாடகங்களுக்குப் பிறகு, கடந்த மே மாதம் லைகா புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக ‘ஏகே 62’ என்பது மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’, ஒரு ரேசி ஆக்‌ஷன் த்ரில்லர் என்று அறிவித்தது.

ஏ.கே.யின் பிறந்தநாளான மே 1-ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும், லைகா இன்னும் அமைதியாக இருக்கிறது, மேலும் மே 1 ஆம் தேதி ‘விடாமுயற்சி’ அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. லைகாவின் மௌனத்தால் விரக்தியடைந்துள்ள அஜித் ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனத்திற்காக மிஸ்ஸிங் போஸ்டரை தயார் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT