Wednesday, October 28, 2026

முதல்வர் ஸ்டாலின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டு: “உழவர்களை உயிராக நினைக்கிறோம்”

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 4வது வேளாண் பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

“உழவர்களை உயிராக நினைக்கிறோம் என்பதை இந்த பட்ஜெட் உணர்த்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் அடிப்படையில் செயல்பட்டதால், பாசனம், விளைச்சல், விலை போன்றவை அதிகரித்தன.
மண் வளம் மற்றும் மக்கள் நலன் காக்க “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரசாயன உரங்களை குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2400 கிராமங்களை மேம்படுத்தும்.
மரபுசார் நெல் ரகங்கள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் போன்றவை ஊக்குவிக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“ஒரு கிராமம் ஒரு பயிர்” என்ற திட்டம் 15,280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாசன மின் இணைப்பு விண்ணப்பங்கள்; கடந்த 2.5 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.
நெல்லுக்கு 500 கோடி ரூபாய் ஊக்கத்தொகை, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வேளாண் கண்காட்சிகள், திருவிழாக்கள் போன்றவை விவசாயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.
கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சி விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
மண் வளம் முதல் மக்கள் நலம் வரை கவனம் செலுத்தி இந்த பட்ஜெட்டை தயாரித்த அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன்.
மத்திய அரசின் வேளாண் கொள்கைகளை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்:

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது பாஜக அரசு.
1.5 ஆண்டுகள் டெல்லியில் போராடி பின்வாங்கியது பாஜக அரசு.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT