சின்னத்திரையில் பெண்கள் காமெடி செய்வது அரிதான விஷயம். அந்த வகையில், குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்து, “காமெடி என்றால் எங்கள் ஏரியா” என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில், பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.
காமெடி மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபடும் நிஷா, சமீபத்திய நிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திருந்தார்.
பிறப்பு மற்றும் ஆரம்ப காலம்:
பிரபலமான நிஷாவின் ஆரம்ப காலம் அவ்வளவு எளிதானதாக இல்லை. தன்னுடைய அப்பா மற்றும் கிராமத்தைப் பற்றி அடிக்கடி பேசும் நிஷா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வீட்டின் பழைய நிலையை பற்றி கூறியிருந்தார்.
“இப்போது இந்த வீடு பெரிய அளவில் இருந்தாலும், ஆரம்பத்தில் ஓட்டு வீடாகத்தான் இருந்தது. நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வரைக்கும் அந்த வீடு ஓட்டு வீடாகத்தான் இருந்தது. எங்கள் குடும்பத்திற்கு இந்த வீட்டைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் கிடையாது. வீட்டில் ஆடு, மாடுகள் இருக்கும். ஆடுகளை வளர்த்து தான் அப்பா என்னையும் தம்பியையும் வளர்த்தார்.”
அப்பாவின் ஆதரவு:
“என் அப்பா கறிக்கடை போட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ‘பொம்பள பிள்ளையை எதற்கு இவ்வளவு படிக்க வைக்கிறீங்க’ என்று ஊரெல்லாம் கேட்டாலும் என் அப்பா, ‘இல்லை என் பொண்ணு படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்’ என்று என்னை படிக்க வைத்தார். என்னை எந்த விஷயத்திற்கும் அப்பா தடுத்தது கிடையாது. ஆனால் அப்பா ‘இது வேண்டாம்’ என்று சொன்னால் அதை நான் செய்ய மாட்டேன்.
அதனாலேயே தந்தைக்காக தான் வேலைக்கு போகாமல் இரண்டு வருடமாக வீட்டில் இருந்தேன். பிறகு குழந்தை பிறந்த பிறகுதான் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.”
அப்பாவின் மீதுள்ள பாசம்:
“அப்பா நான் வளர்ச்சி அடைவதை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு இருந்தார். முதல் முறையா நான் டிவி சேனலில் வந்த போது எங்க அப்பா ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு டிவி வைத்து எல்லாரையும் பார்க்க சொல்லி இருக்காரு.
எல்லோரும் மண்டபத்தில் டிவி வைத்து என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து இருக்காங்க. அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னுடைய உலகம் எப்போதுமே எங்க அப்பா தான். அதற்கு பிறகு தான் என்னுடைய கணவர் கூட..
இப்ப கூட எங்க அப்பா ‘நீ எந்த ப்ரோக்ராமுக்கும் போக கூடாதுன்னு சொன்னா நான் வீட்டிலேயே இருந்து விடுவேன். வெளியே என்னை பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வருகிறது அதைப்பற்றி நான் கவலைப்படாததற்கு காரணமே என்னுடைய அப்பா தான். என்னை தடை செய்வதற்கோ என்னை பற்றி நெகட்டிவா பேசுறதுக்கும்
