Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய அருண்விஜய் ! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

90களில் இருந்து சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் போதுமான அளவு வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அவருக்கு ஒரு பெரிய டர்னிங் பாயிண்டாக இருந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். அஜித் நடித்த அந்தப் படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். அந்தக் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. அதுவரை யாருமே அருண்விஜயை அப்படி பார்த்ததில்லை. பெரிய ட்விஸ்டை அந்தப் படத்தின் மூலம் கொடுத்தார். பக்கா ஸ்டைலான வில்லனாகத்தான் தெரிந்தார் அருண்விஜய். அதன் மூலம் இழந்த வாய்ப்பை பெற்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வர நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை திருப்திப்படுத்தியதாகவே இருந்தன. இந்த நிலையில் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் அருண்விஜயின் மிஷன் என்ற புதிய படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் தடம் என்ற ஒரு தரமான படத்தில் நடித்த அருண்விஜயிடம் விடாமுயற்சி பற்றி கேட்டபோது மகிழ் திருமேனி எப்போதும் என்னிடம் ஒரு தனி அக்கறை கொண்டவர் என்று அருண்விஜய் கூறினார்.

அதுவும் அவர் படத்தின் ஹீரோவை மகிழுக்கு பிடித்துவிட்டால் திரையில் அந்த ஹீரோவை பயங்கரமாக காட்டத் துடிப்பார் என்றும் இப்போது அஜித்துடன் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றும் அருண்விஜய் கூறினார். அதுவும் மகிழ் வைக்கிற டச்சில் அஜித் சாரோட பிரசன்ஸ் மாஸாக இருக்கப் போகிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில் அருண்விஜய் என்று கூகுளில் தேடினால் உங்கள் வருங்கால மூவி லிஸ்ட்டில் விடாமுயற்சி படமும் வருகிறதே. அது உண்மையா? நடிக்கிறீர்களா? என்று கேட்க ‘அப்படியா? அது எனக்கே தெரியாது. ஆனால் இல்லை’ என்று அருண்விஜய் கூறினார்.

அருண்விஜயின் விடாமுயற்சிக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அஜித் உடன் இணைந்து நடிக்கும் விடாமுயற்சி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால், அருண்விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்விஜயின் விடாமுயற்சிக்கு காரணங்கள்

அருண்விஜயின் விடாமுயற்சிக்கு பின்னால் சில காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்காமல், மாறுபட்ட பாத்திரங்களில் நடிப்பதை முயற்சித்தது.
தன்னுடைய திறமைகளை மேம்படுத்த தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டது.
தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்தது.
அருண்விஜயின் இந்த விடாமுயற்சிக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT