Tuesday, February 24, 2026

தனி ஆளாக நின்று மிரட்டிய அஜித் !அருண் விஜய்யின் மிஷன் படவிழா அரங்கை அதிர விட்ட அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் நடிகர் அருண் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படமாக அமைந்தது. இதனை அடுத்து பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அருண் விஜய், தான் வணங்கான் படத்தில் நடித்து வருவதால் விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அருண் விஜய் கூறுகையில், “விடாமுயற்சி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதே சமயத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வணங்கான் படம் ஒரு முக்கியமான படம் என்பதால் அதை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியவில்லை.

விடாமுயற்சி படத்தின் மூலம் மகிழ் திருமேனி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். ஒரு ஹீரோவாக மகிழ் திருமேனி பிடித்துவிட்டால் அவரை திரையில் மிகவும் சிறப்பாக காட்ட முற்படுவார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT