மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. நடிகை த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் அஜித் துபாயில் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இப்போது நடிகர் அஜித் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். அவர், விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, படத்தில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர் கயல் என்ற தகவல்தான் அது.
‘விடாமுயற்சி’ படம் தொடங்கியதில் இருந்தே, அது குறித்தான அப்டேட் எதுவும் பெரிதாக இல்லை. அதனால், தற்போது வெளியாகியுள்ள த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் – த்ரிஷா இருவரும் முன்னதாக ‘வீரம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால், ‘விடாமுயற்சி’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் குறித்தான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
