Wednesday, October 28, 2026

அயலான் படத்தின் முதல் விமர்சனம் ! ப்ளாக் பஸ்டர் ஹிட் !ஆனால் இரண்டாம் பாதி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ரத்தம் தெறிக்க ரத்தமும் சதையுமாய் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனம் இதோ !

ஆடுஜீவிதம்: கண்ணீரை வரவழைக்கும் பிருத்விராஜின் அற்புத நடிப்பு! பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா...

லொள்ளு சபா புகழ் சேசு காலமானார் !அதிர்ச்சியில் திரையுலகம்

சேசு மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்...

2024 ஐபிஎல் சிஎஸ்கே அணியின் கேப்டனானார் ருத்துராஜ் கெய்க்வாட்..! தோனி ரசிகர்கள் ஷாக்

2024 தொடங்குவதற்கு முன்னதாக MS தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...
ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 12ம் தேதி ரிலீஸாகும் அயலான் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்றாலும், இரண்டாம் பாதி சில மைனஸ்களைக் கொண்டுள்ளது.

படத்தின் கதையில், இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. அந்த ஏலியனை சிவகார்த்திகேயன் தஞ்சமெடுக்கிறார். பின்னர், வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து ஏலியன் தப்பிக்க சிவகார்த்திகேயன் உதவுகிறார்.

ADVERTISEMENT

படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும், இடைவேளைக்குப் பின்னர் மிரட்டலாக உள்ளதாம். இரண்டாம் பாதி தாறுமாறாக இருக்கிறது எனவும், திரைக்கதையிலும் இயக்குநர் ரவிக்குமார் மிரட்டிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டும் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் செம்ம மாஸ் காட்டியுள்ளாராம். ஆனால், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் மட்டும் ஒர்த்தாக இல்லை என நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் ஏலியனுக்கு சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளதும் ரசிக்கும் படி உள்ளதாம். சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட அயலான் படத்தை பார்க்கலாம் என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

மைனஸ்கள்

இரண்டாம் பாதி திரைக்கதை
ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள்
ப்ளஸ்கள்

சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள்
ஏலியனுக்கு சித்தார்த் டப்பிங்
சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடி

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT