பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவு பெறவுள்ளது. இதில் யார் டைட்டில் வெல்வார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான மாயாவுக்கு விஜய் டிவி அதிகமாக ஆதரவு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பிக் பாஸ் வீட்டில் அதிக விதி மீறல்களை செய்யும் நபராக மாயா காணப்படுகிறார். எலிமினேஷனில் வெளியேறும் டோர் வழியில் இருக்கும் நபர்களுடன் மாயா பேச முயற்சி செய்தாலும் பிக் பாஸ் அதை கண்டு கொள்வதில்லை. பல நேரங்களில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுகிறார், நாமினேஷன் பற்றி பேசுகிறார். ஆனால் இதுவரை இந்த விஷயங்கள் பிக் பாஸ் விதிமீறல்களுக்கு உள்ளே வரவில்லை.
அதேவேளை, பிக் பாஸ் வீட்டில் உள்ள ஏனைய போட்டியாளர்கள் செய்யும் சிறிய தவறுகளையும் நோண்டும் கமலஹாசன் மாயாவை கடிந்து பேசுவதே கிடையாது. மாயா செய்யும் பிழைகளையும் ஒவ்வொரு எபிசோடிலும் நியாயப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதனால், விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனின் ஆதரவுடன் மாயா டைட்டில் வெல்வார் என்று பலரும் கருதுகின்றனர்.
இந்த தகவல்கள் குறித்து விஜய் டிவி மற்றும் கமல்ஹாசன் தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை.
