Wednesday, October 28, 2026

நேபாளத்தில் பேருந்து விபத்து: 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் பலி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர்.

நேபாளத்தின் லும்பினி மாகாணம் நேபாள்கஞ்ச் நகரில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, டாங் மாவட்டத்தின் பாலுபாங் என்ற இடத்தில் ரப்தி நதி மீதான பாலத்தில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இந்தியாவின் பிஹாரை சேர்ந்த யோகேந்திர ராம் (67), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முனே (31) ஆகியோரும் அடங்குவர். மேலும் 23 பேர் காயமடைந்தனர். இவர்கள் கோகல்பூரில் உள்ள நேபாள்கஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பேருந்து ஓட்டுநர் லால் பகதூர் நேபாளியை (28) போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT