தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… பொங்கல் ரிலீஸ்” என பதிவிட்டுள்ளார். இதோடு, ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில், பைக் மீது படுத்தபடி கால் மேல கால் போட்டு ஸ்டைலிஷாக இருக்கும் தனுஷ், ரசிகர்களை வசீகரிக்கிறார்.
கேப்டன் மில்லர் படம் பீரியட் ஜானரில் ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகியுள்ளது. இதில் தனுஷுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணி முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக்காயிதம் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. எனவே, கேப்டன் மில்லரும் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் ட்வீட்டை தொடர்ந்து, கேப்டன் மில்லர் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன. இந்த ட்ரெய்லர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
