குழந்தைகளுக்கு ஏற்படும் சில பொதுவான பிரச்சினைகளுக்கு ஏலக்காய் சிறந்த நிவாரணம் அளிக்கும் என்பதை அறிவீர்களா?
வாந்தி: இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி தேனில் கலந்து குழந்தையின் நாக்கில் தடவினால் வாந்தி உடனே நின்றுவிடும்.
மூக்கடைப்பு: ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு நான்கு ஐந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு திறந்துவிடும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் உள்ள குழந்தைகளுக்கு ஏலக்காய் டீ கொடுத்தால் நல்லது. டீத் தூள் குறைவாகவும் ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து தயாரித்தால் வெளிவரும் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும்.
வறட்சி, தலைவலி, வாந்தி: வாயில் வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் பெறலாம்.
தலைசுற்றல், மயக்கம்: வெயிலில் அதிகம் அலைந்தால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்திற்கு நான்கு ஐந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து குடித்தால் தலைசுற்றல், மயக்கம் மறையும்.
விக்கல்: விக்கலால் அவதிப்படுபவர்கள் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, நான்கு ஐந்து புதினா இலைகளுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி குடித்தால் விக்கல் நின்றுவிடும்.
வாய்வு தொல்லை: வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை காய வைத்து பொடியாக்கி, அரை டீஸ்பூன் தண்ணீரில் கொதிக்க வைத்து உணவுக்கு முன் குடித்தால் வாய்வு தொல்லை நீங்கும்.
குறிப்பு: ஏலக்காயை அதிகமாகவோ, அடிக்கடி வாயில் போட்டு மெல்லவோ கூடாது.
குழந்தைகளுக்கு ஏலக்காய் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சிறிய குழந்தைகளுக்கு முழு ஏலக்காயை கொடுக்காமல், பொடியாக்கி தேனில் கலந்து கொடுக்கவும்.
ஏலக்காய்க்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
குழந்தைக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தால், ஏலக்காய் கொடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.
