Wednesday, October 28, 2026

கல்வீசி தாக்குதலில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேதம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் வரை தினசரி இயங்கும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திருவொற்றியூர் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில், திருவொற்றியூர் அருகே சென்றபோது, திடீரென மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், ரயிலின் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

ADVERTISEMENT

ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலால், ரயில்வே பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், ரயில்வே பாதைகளில் ஏற்படும் சீர்குலைவுகளை தடுக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT