Wednesday, October 28, 2026

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20-26 ஜனவரி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

20 ஜனவரி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

21 ஜனவரி: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

22-26 ஜனவரி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3
ஊத்து (திருநெல்வேலி) 2
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 2
தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) 2
நாலுமுக்கு (திருநெல்வேலி) 2
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 2
வட்டானம் (ராமநாதபுரம்) 1
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 1
கோடியக்கரை (மயிலாடுதுறை) 1
காக்காச்சி (திருநெல்வேலி) 1
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 1
மண்டபம் (ராமநாதபுரம்) 1
திருவடானை (ராமநாதபுரம்) 1
பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 1
ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 1
மாஞ்சோலை (திருநெல்வேலி) 1
மணமேல்குடி (புதுக்கோட்டை) 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT