நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனித்துவமான நடிப்பு:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் டேனியல் பாலாஜி. ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் தனது தனித்துவமான நடிப்பால் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற்றிருந்தார்.
ஆவடியில் டேனியல் பாலாஜி:
டேனியல் பாலாஜி ஆவடியில் வசித்து வந்தார். அங்கு அவர் அங்காள பரமேஸ்வரி என்ற தெய்வத்திற்கு 2 கோடி மதிப்பில் ஒரு கோயிலை கட்டியிருக்கிறார். 7 வயதில் இருந்தே அந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார்.
அம்மனுக்கு பணிவிடை:
அந்த கோயில் பழுதடைந்த நிலையில் இருந்தபோது, 7 வயது சிறுவனாக இருந்த டேனியல் பாலாஜி அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்வாராம்.
மக்களுடன் டேனியல் பாலாஜி:
தன் அம்மா பிறந்தநாளில் ஆவடி மக்களுக்கு சேலைகள் வழங்குவார். படத்தில் வில்லன் என்றாலும் நிஜத்தில் ஹீரோ என்று அந்த ஏரியா மக்கள் டேனியல் பாலாஜியை பற்றி கூறுகின்றனர்.
கோயிலில் விளக்கேற்றி வழிபாடு:
டேனியல் பாலாஜி ஒவ்வொரு நாளும் அந்த கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். டேனியல் பாலாஜி இறந்த அன்று கூட விளக்கேற்றியிருந்தார். ஆனால் அந்த விளக்கு அதிகாலையிலேயே அணைந்து விட்டதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இது டேனியல் பாலாஜியின் மரணத்திற்கு முன் அறிகுறியாக இருந்ததாக கண்ணீர் மல்க கூறினார்கள்.
டேனியல் பாலாஜியின் மறைவு ரசிகர்கள் மற்றும் ஆவடி மக்களுக்கு பேரிழப்பாகும்.
