நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில், “திருச்சிற்றம்பலம்”, “வாத்தி” போன்ற படங்களைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
டி50 படத்தின் டைட்டில் ராயன்:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள டி50 படத்தின் டைட்டில் “ராயன்” என்று இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது.
தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக்:
ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில், தனுஷ் மொட்டை தலையுடன் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார்.
செஃப்கள் அணியும் உடையை அணிந்து, ரத்தக்கறை படிந்திருப்பது போன்ற தோற்றத்தில் தனுஷ் இருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
படம் ஒரு கேங்ஸ்டர் திரில்லர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது.
தனுஷின் ராயன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராயன் லூக்கில் அஜித் இருந்தால் எப்படி இருக்கும் என அஜித் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் வைரல் இதோ

