தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த ராம்குமார் இயக்கத்தின் படம் டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத், செல்வராகவன் படங்களில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமாருடன் தனுஷ் இணையவிருந்த படம் ட்ராப் ஆனது.
காரணம் என்ன?
தனுஷ் விலகியதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், தனுஷுக்குப் பதிலாக விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் கம்பேக்
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படங்கள் என்பதால், ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் தரப்பு மௌனம்
பொதுவாக ஏற்கனவே கமிட்டான படங்களில் இருந்து தனுஷ் விலக மாட்டார். ஆனால் ராம்குமார் படத்தில் இருந்து விலகியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி 50 ஃபர்ஸ்ட் லுக் எப்போது?
இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்துள்ள டி 50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
