அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் தீரஜ்
ஏர் ஃபிளிக் புரொடக்ஷன் தயாரிப்பில், மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘டபுள் டக்கர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்தில் தீரஜ் நாயகனாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட் நாயகியாக நடிக்கிறார். கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ளார். கவுதம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபேன்டஸி காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தில், 2 அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் நாயகன் தீரஜுடன் இணைந்து நடிக்கின்றன. இது பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
