Wednesday, October 28, 2026

இயக்குநராக அறிமுகமாகும் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ், தனது தாத்தாவை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, ‘தாஜ்மஹால்’ படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

ADVERTISEMENT

பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், ஹீரோவாக பெரிதாக ரசிகர்களை கவர முடியவில்லை. இவர் நந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதினி, அர்த்திகா என்ற இரண்டு பெண்கள் உள்ளனர்.

மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்கி இருந்தார். ஆனால், அந்தப் படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.

இந்த நிலையில், மனோஜின் மகள் மதிவதனி, தனது தாத்தா பாரதிராஜாவை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். தனது பேத்தியின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பாரதிராஜா அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிவதனியின் இந்த முயற்சி திரையுலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT