இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை வெளியான ப்ளூ ஸ்டார் 4 நாள்களில் இந்திய அளவில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். இதில் இயக்குநர் பா.இரஞ்சித், ஜெயக்குமார், நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் துணை இயக்குநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஜெயக்குமார், “அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் கவினை தேர்வு செய்தோம். அவருக்கும் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்தடுத்த அவருடைய திரைப்பட வேலைகளால் இதில் நடிக்க முடியாமல் ஆனது. அதனால், அசோக் செல்வனிடம் கதை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தார்” எனக் கூறியுள்ளார்.
டாடா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கவின், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்.
அசோக் செல்வன், சாந்தனுவின் நடிப்பால் மெருகேறிய ப்ளூ ஸ்டார்
கிரிக்கெட்டை மையப்படுத்திய ப்ளூ ஸ்டார் படத்தில், அசோக் செல்வன் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். அவரது நடிப்பும், கதைக்களமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சாந்தனுவும் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது நடன காட்சிகளும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளன.
இயக்குநர் ஜெயக்குமாரின் இயக்கத்தில், கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் படம், நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.
Celebrating #BlueStar 💙#BlueStarRunningSuccessfully pic.twitter.com/9O53dlxcN9
— Neelam Productions (@officialneelam) January 29, 2024
