Wednesday, October 28, 2026

ரஜினி முதல் அமிதாப் வரை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரையுலக பிரபலங்கள் முழு லிஸ்ட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

ADVERTISEMENT

பாலிவுட் தரப்பிலிருந்து அமிதாப்பச்சன், ரன்பீர்கபூர், ஆலியாபட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரானா, மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரனாவத், ரன்தீப் ஹூடா – லின் லைஷ்ராம், விவேக் ஓப்ராய், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ரோகித் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் கலந்துகொண்டுள்ளார். ஷங்கர் மகாதேவன், மதுர் பாண்டார்கர், ஷெபாலி ஷா, விபுல் ஷா, அனு மாலிக், சோனி நிகாம் ஆகியோரும் விழா நடைபெறும் இடத்தில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் மற்றும் மனைவி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட திரையுலக பிரபலங்கள், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT