Wednesday, October 28, 2026

கேம் சேஞ்சர் படத்தின் ரீலிஸ் தேதியை லாக் செய்த படக்குழு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கும் “கேம்சேஞ்சர்” படத்தின் ஷூட்டிங் 40 நாட்களில் முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RRR படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

ADVERTISEMENT

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார்.

படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தாமதம், ஷங்கர் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததே காரணம்.

சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் ஷூட்டிங் முடியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, “கேம்சேஞ்சர்” படத்தின் ஷூட்டிங் இன்னும் 40 நாட்களில் முடிக்கப்பட உள்ளதாம்.

மேலும், படம் வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் ராம்சரண் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT