25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நடிகை கவுதமி, நேற்று மாலை சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்ததற்கான காரணம்:
“என் மனதிற்கும், என் கொள்கைக்கும் சரியெனபட்டது. அதனால் இணைந்தேன்.”
ஜெயலலிதா பற்றிய கருத்து:
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் உங்களுக்கு பழக்கம் உண்டா ? – அவரை நேரில் சிலமுறை சந்தித்து பேசி யிருக்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக அவரை நேசிக்கிறேன். அவரை பார்த்து வியந்து இருக்கிறேன். அவர் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி.”
அதிமுகவில் பொறுப்பு:
“இப்போதுதான் இணைந்தேன். அதற்குள் பதவியா ? அதற்காக நான் சேரவில்லை.”
லோக்சபா தேர்தல் பிரச்சாரம்:
“கட்சித் தலைமை சொன்னால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்.”
பாஜகவை விட்டு வெளியேறியதற்கான காரணம்:
“சொத்து பிரச்னை, என் தனிப்பட்ட விஷயம். அந்த பிரச்னைக்காக நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை.”
பாஜக விமர்சனம்:
“நான் யாருடனும் சண்டை போட அதிமுகவில் சேரவில்லை. என்னிடம் ஏன் கடும் விமர்சனத்தை எதிர் பார்க்கிறீர்கள்.”
சட்டசபை / லோக்சபா தேர்தல் போட்டி:
“நான் விருதுநகரில் வேட்பாளராக பணியாற்றவில்லை. அந்த தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினேன். இப்போது தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். தேர்தலில் சீட் கொடுப்பது பற்றி பின்னர் பார்ப்போம்.”
