Wednesday, October 28, 2026

அட பாவமே இது என்னடா GOATக்கு வந்த புதிய சோதனை !ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 68வது படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் வெளியானதும், அமெரிக்காவை சேர்ந்த டி.பி. கூப்பர் என்பவரின் கதை தான் இந்த படம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

1971ம் ஆண்டு விமானத்தை கடத்தி அமெரிக்காவிடம் பல கோடி பணத்தை வாங்கிக் கொண்டு பயணிகளை விடுவித்து விட்டு மீண்டும் விமானத்தை பறக்கச் சொல்லி பாராசூட்டில் கட்டிக் கொண்டு கொள்ளையடித்து மாயமான டி.பி. கூப்பர். அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கே கடைசி வரை தண்ணிக் காட்டிய கூப்பர் இது வரை என்ன ஆனார் என்றும் அவர் கொள்ளையடித்த பணம் என்ன ஆனதும் என்றும் தெரியவே இல்லை.

ADVERTISEMENT

இந்த கதையின் திரைப்பட வடிவம் வெங்கட் பிரபுவின் தளபதி 68 படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், விஜய்க்கு கிண்டிய மங்காத்தா படம் போல ஒரு படமும் சிம்புவுக்கு பண்ண மாநாடு படம் போல ஒரு படமும் கேட்ட விஜய்க்கும் இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்த மாதிரி இந்த படம் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இதற்கு மாறாக, வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினி மேன் படத்தின் கதை தான் தளபதி 68 படம் எனவும் சிலர் கூறுகின்றனர். இந்த படத்தில் வில் ஸ்மித் ஜீனை வைத்து அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிரி அவருடைய யங் வெர்ஷனான இன்னொரு வில் ஸ்மித். இந்த கதையும் தளபதி 68 படத்தில் இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த இரண்டு கதைகளும் தளபதி 68 படத்திற்கு பொருத்தமாக இருப்பதால், எது உண்மையான கதை என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT