தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) செப்டம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. வரவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அதன் தயாரிப்பாளர்களால் ஏப்ரல் 11 வியாழன் அன்று அறிவிக்கப்பட்டது.
படத்தின் அறிவிப்புப் பதிவில் தளபதி விஜய்யின் தோற்றமும் இடம்பெற்றுள்ளது. ‘GOAT’ இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரப்பூர்வ X கைப்பிடியில் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
GOAT: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே நிலவிவருகிறது.
Eid vaazhthukaludan.. vinayaga chathurthi ku varrom #TheGreatestOfAllTime from SEPTEMBER 5th!! Namma #Thalapathy ku #WhistlePodu @actorvijay @archanakalpathi @aishkalpathi @thisisysr #TheGOAT #aVPhero pic.twitter.com/xuWT02pKJt
— venkat prabhu (@vp_offl) April 11, 2024
5 முறை காதல் தோல்வி.. ரோமியோ விஜய் ஆண்டனி வாழ்க்கையில் இவ்வளவு சோகங்கள் வந்திருக்காமும்முரமடைந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. வெங்கட் பிரபு எப்போதும் வித்தியாசமான முறையில் மேக்கிங் செய்வார் என்பதால் இதில் எந்த மாதிரியான மேக்கிங்கை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் GOAT படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்யும் வெங்கட் பிரபு; இதில் கூடுதல் வேகம் காட்டியிருக்கிறார். இதனால் விஜய்யே இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. கடைசியாக கேரளாவில் ஷூட்டிங் நடந்தது. இப்போது ரஷ்யாவில் ஷூட்டிங் நடந்துவருகிறது.
படம் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படமானது செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. அந்த அறிவிப்போடு சேர்த்து புதிய போஸ்டரையும் வெளியிட்டது.. அதில் விஜய் கண்ணாடி அணிந்தபடி படு க்யூட்டாக இருந்தார்.
டீகோட் செய்யும் ரசிகர்க: இந்நிலையில் படத்தின் போஸ்டரை வைத்து ரசிகர்கள் டீகோட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது அந்தப் போஸ்டரில் பிப்ரவரி 16, 2000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக அன்றைய தினத்தில் உலக அளவில் என்ன நடந்தது என்பது குறித்து நெட்டிசன்கள் அலசி ஆராய ஆரம்பித்தனர். அதன்படி அந்த நாளில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விமான விபத்து நடந்திருப்பதாக கூறுகிறார்கள். விஜய் இந்தப் படத்தில் விமானியாக நடிக்கிறார். எனவே அந்த தேதிக்கும் படத்துக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருப்பதாக இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
Thala #Ajithkumar Reference In #TheGreatestOfAllTime Poster 👌
– Fanboy #VenkatPrabhu 😉💙 Mameyyy🔥#YuvanShankarRaja #Ajithkumar #VidaaMuyarchi pic.twitter.com/aH2SmlsYah
— 👑ᴀᴋ ᴏғғɪᴄɪᴀʟ (@titus_lovely) April 11, 2024
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ஒரு பெப்பி பாடலுக்கு தளபதி விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து நடனமாடுவதையும் ‘GOAT’ பார்க்கவுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ‘கோட்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மேலும், இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘GOAT’ ஒரு காலகட்ட அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, அஜ்மல் அமீர், வைபவ், லைலா, மோகன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்ட குழுவினர் ஹீரோ, வில்லன் தரப்பில் நடிக்கின்றனர்.
