Wednesday, October 28, 2026

GOAT படத்தின் ரீலிஸ் இதுவா ? வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest Of All Time” படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட ஷூட்டிங் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது.

முதலில் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது அந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக, ஆகஸ்ட் 15ம் தேதி “The Greatest Of All Time” படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே தேதியில் அல்லு அர்ஜுன் நடிக்கும் “புஷ்பா 2” திரைப்படமும் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் தளபதி விஜய் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படம் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என நம்புவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT