Wednesday, October 28, 2026

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் ரீலிஸ் தேதி இதுவா ? தீயாய் பரவும் தகவல்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தி கோட்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

புத்தாண்டையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதலில் ‘தி கோட்’ படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ‘தி கோட்’ படம் மற்ற எந்த படங்களுடன் நேரடியாக மோதாமல் ரிலீசாக வெளிவருவதற்கு படக்குழுவினர் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த பொங்கலையொட்டி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் வெளியாகின. இரு படங்களும் அதிகமாக வசூலை பெறும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவான அளவுக்கே கலெக்ஷன் ஆனது கவனிக்கத்தக்கது.

இதனால், ‘தி கோட்’ படத்தை மற்ற எந்த படங்களுடன் மோதாமல் வெளியிட படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், இந்தப் படம் 2டி மற்றும் 3டி ஆகிய இரண்டு பதிப்புகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT