லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்னரே தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் “தி கோட்” (The Greatest of All Time) படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். விஜய், பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பிற்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக படக்குழு அமெரிக்கா சென்று படக்கதைக்கு தேவையான டி ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தியது. அதன் பிறகு சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, பாண்டிச்சேரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்தது.
தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் துபாய் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் விஜய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
“தி கோட்” படத்திற்கு பின்னர், தளபதி 69 படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
