தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இவர் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் செகண்ட் லுக் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு தன்னுடைய துணை இயக்குனர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 68 படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதன் முதலாக இந்த தலைப்பு இவ்வளவு விரிவாக இல்லாமல் சுருக்கமாக G.O.A.T என்று தான் இருந்துள்ளது. ஆனால் இதைத்தான் தலைப்பாக வைக்கலாம் என்று வெங்கட் பிரபு முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே தளபதி 68 படத்தின் தலைப்பு G.O.A.T என்று தகவல் கசிந்து விட்டது. இதனால் கோபமான வெங்கட் பிரபு இந்த தகவலை யார் கசிய விட்டது என்ற கோபத்தில் தன்னுடைய துணை இயக்குனர்களை கேட்ட வார்த்தை பயன்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதன் பிறகுதான் Greatest Of All Time என்று விரிவாக வைத்துள்ளார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், வெங்கட் பிரபு ஒரு கடினமான இயக்குனர் என்று அவரது பணி அனுபவம் காட்டுகிறது. அவர் தனது படங்களில் எந்த ஒரு குறையும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறார். அதற்காக அவர் தனது துணை இயக்குனர்களை கடுமையாக கண்டிக்கவும் செய்வார் என்பதும் தெரிந்ததே.
இந்த தகவல் உண்மையாக இருந்தால், வெங்கட் பிரபுவின் கோபத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால், அதே நேரத்தில், அவர் தனது துணை இயக்குனர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது சரியல்ல. ஒரு இயக்குனராக, அவர் தனது துணை இயக்குனர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும்.
