Tuesday, February 24, 2026

ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் நாளை (ஜனவரி 15) காலை 9.15 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டர் வெளியாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT