Wednesday, October 28, 2026

ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் செகண்ட் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தில் அனைவரும் தங்களது டப்பிங் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய டப்பிங் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டாவது சிங்கிள் பொங்கலை ஒட்டி நாளை வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

இந்தப் படம் விஷ்ணு விஷாலுக்கும் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT