Wednesday, October 28, 2026

ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஆப்பிரிக்காவில் படகு விபத்து 58 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எம்போகோ ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

லாரி ஸ்டிரைக்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக...

அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

முன்னாள் அமைச்சரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக...

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் மரணம்

சென்னை, ஏப்ரல் 6: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல்நலக்...
ADVERTISEMENT

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இந்த வகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வாகனத் தொழில், உற்பத்தித் தொழில், சுற்றுலாத் தொழில் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பயணம், தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT