Tuesday, February 24, 2026

விஜய் ஆண்டனி நடித்த ஹிட்லர் படத்தின் டீசர் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெளதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன் 2’, ‘ரத்தம்’ ஆகிய படங்கள் ரசிகர்களை சோதித்த நிலையில், அவரது வாழ்க்கையிலும் மகள் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த சோகம் மற்றும் ‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங்கில் நடந்த விபத்து என இந்த ஆண்டு முழுக்கவே சோகமயமாக மாறி இருந்தது. ஆனால், மகள் இருந்து ஒரு வாரத்திலேயே ‘ரத்தம்’ படத்தின் புரமோஷனுக்கு இளைய மகளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அடுத்ததாக தனா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஹிட்லர்’ படத்தின் டீசரை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். டீசரில் யார் நடிச்சிருக்கிறார்? யார் இருக்கா? என்ன நடக்கிறது என எதுவும் தெளிவாக தெரியாத விதத்தில் கேஜிஎஃப் படத்தில் வரும் ஃபுல் கட் ஷாட் போல சின்ன டீசரிலேயே பல கட்களை போட்டு எரிச்சலைக் கூட்டுகின்றனர்.

கெளதம் மேனன் மற்றும் விஜய் ஆண்டனி மட்டுமே தெளிவாக தெரிகின்றனர். கடைசியாக வரும் அந்த செக் செக் செக் போர்ஷன் சுவாரஸ்யமாக உள்ளது. மற்றபடி அனைத்தும் வழக்கமான படமாகவே தெரிகிறது.

‘ஹிட்லர்’ படத்தைப் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், டீசரின் அடிப்படையில் பார்த்தால், இதுவும் ஒரு வழக்கமான ஆக்ஷன் திரில்லர் படமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

ரசிகர்கள் இந்த டீசரை பார்த்த பிறகு பெரும்பாலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டீசரில் எதுவும் தெளிவாகத் தெரியாததால், படம் பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இல்லை.

‘ஹிட்லர்’ படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT