Wednesday, October 28, 2026

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி மாற்றங்கள்?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

IND vs AFG :ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி சர்வதேச டி20 போட்டியாகும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விளையாடும் XIல் சில மாற்றங்களை செய்யும் என்று கூறப்படுகிறது.

ஜிதேஷ் சர்மாவுக்கு ஓய்வு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

உலக கோப்பை 2023க்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், நான்காவது போட்டியில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டராக விலையாடி வருபவர் ஜிதேஷ் சர்மா. இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன் கடைசியாக இந்தியாவுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்லில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

அவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத அவேஷ் கானும் இந்த இறுதி ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணிக்குள் வருவார் என்றும் கூறப்படுகிறது. முகேஷ் குமார் அல்லது அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ளது.

நட்சத்திர இடது கை கால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்க்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அவர் விளையாட உள்ளார்.

ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய கடைசி சர்வதேச போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் பார்மிற்கு வர வேண்டும் என்று அணி நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தொடருக்காக 14 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்றார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால் அவரால் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் டக் அவுட் ஆனார்.

இந்திய அணியின் எதிர்பார்த்த லெவன்:

ரோஹித் சர்மா (C)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விராட் கோலி
ஷிவம் துபே
ரின்கு சிங்
சஞ்சு சாம்சன் (WK)
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
ரவி பிஷ்னோய்
அவேஷ் கான்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT