Wednesday, October 28, 2026

IND vs SA இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமே விராட் கோலியா ? கடுப்பில் ரோஹித்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

IND vs SA :தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் 23 விக்கெட்கள் வீழ்ந்த போதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்த அபாரமான செயல்பாட்டுக்கு விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் இடைவேளையில், ரோஹித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறியபோது, துணை கேப்டன் பும்ரா வீரர்களை உற்சாகப்படுத்தி அணியை வழிநடத்த வேண்டும். ஆனால், அப்போது விராட் கோலி முன்வந்து வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். இடைவேளை முடிந்து ஆடச் சென்ற போது உற்சாகமூட்டி பேசினார்.

ADVERTISEMENT

இரண்டாவது டெஸ்டின் முதல் நாள், ரோஹித் சர்மா களத்தில் இருந்தபோதும் விராட் கோலி தன் டெஸ்ட் கேப்டன்சி அனுபவத்தை முன் வைத்து ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனைகளை கூறினார். முகமது சிராஜ் பந்து வீசிய போது பேட்ஸ்மேன் என்ன செய்கிறார்?, அவருக்கு எந்த இடத்தில் பந்து வீசினால் விக்கெட் கிடைக்கும் என கூறினார். அதே போல விக்கெட்டும் விழுந்தது. ரோஹித் சர்மாவுக்கு அப்போது பீல்டிங் நிறுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார் கோலி. அதுவும் ஒரு விக்கெட் விழ காரணமாக இருந்தது.

என்ன தான் ரோஹித் சர்மா கேப்டன் என்ற போதும், இந்திய வீரர்கள் அனைவரும் விராட் கோலிக்கு கட்டுப்பட்டு அவர் கூறியதை அப்படியே செய்தனர். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் விராட் கோலி தான் கேப்டனாக செயல்படுகிறார் எனவும், அதனால் தான் இந்திய அணி சிறப்பாக ஆடி உள்ளது எனவும் விராட் கோலி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள், வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த கேப்டன் மற்றும் ஒரு சிறந்த தளபதி. அவர் தன் அனுபவம் மற்றும் அறிவை பயன்படுத்தி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு விராட் கோலியின் பங்களிப்பு மிகப்பெரியது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT