17-வது ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.
ஏப்ரல் 17ம் தேதி இந்தியா முழுவதும் ராமநவமி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
கொல்கத்தா போட்டி தேதி மாற்றம்:
வடமாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் ராமநவமி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற இருந்தது.
ராமநவமியை முன்னிட்டு இந்த போட்டியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 16ம் தேதி இந்த போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் தேர்தல் காரணம்:
கொல்கத்தா காவல்துறை, ராமநவமி அன்று பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது.
மேலும், ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் தொடங்க இருப்பதும் தேதி மாற்றத்திற்கு மற்றொரு காரணம்.
குஜராத் டெல்லி போட்டி தேதி மாற்றம்:
இதனையடுத்து, ஏப்ரல் 16ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறும்.
அதேபோல், ஏப்ரல் 16ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணிகள் எதிர்கொள்ள இருந்த போட்டி ஏப்ரல் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
