Wednesday, October 28, 2026

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் இதுவா ! வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ஜெயிலர்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு 1.20 கோடி பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், இயக்குனர் நெல்சனுக்கு 1.40 கோடி மதிப்புள்ள ‘Porsche’ காரையும் பரிசாக வழங்கினார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு எந்த பரிசும் வழங்கப்படாதது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அவருக்கும் சொகுசு கார் மற்றும் காசோலையை வழங்கினார் கலாநிதிமாறன்.

ADVERTISEMENT

தற்போது “ஜெயிலர்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஹூக்கும்” என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி மீண்டும் சிறைக்கைதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

“ஜெயிலர்” படத்தில் ரஜினி பல இடங்களில் பயன்படுத்திய “ஹூக்கும்” என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது “வேட்டையன்” படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “தளபதி 171” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தளபதி 171” படத்தின் திரைக்கதை எழுதும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

“தளபதி 171” படப்பிடிப்பு விரைவில் தொடங்கி 2025இல் மிக பிரமாண்டமாக திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT