Wednesday, October 28, 2026

தனி மனிதன் அஜித் என்ற ஒரே பெயருக்கே அதிர்ந்த கலைஞர் 100 விழா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வண்ணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோர் வரவில்லை. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

விஜய், அஜித் ஏன் வரவில்லை?

விஜய், அஜித் ஆகிய இருவரும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருவரும் தயக்கம் காட்டுவார்கள்.

விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது திமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்வது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதால் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

அஜித், கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அஜித், “இதுபோன்ற விழாவுக்கு தங்களை கட்டாயப்படுத்தி வரவைக்கிறார்கள்” என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது திமுகவினர் இடையே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்வது திமுகவினருடன் மோதல் ஏற்படலாம் என்பதால் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இருவரும் வராமல் இருந்ததால் நிகழ்ச்சி தோல்வியடைந்ததா?

இருவரும் வராமல் இருந்ததால் நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நிகழ்ச்சிக்கு முன்பே இருவரும் வரப்போவதில்லை என்பது தெரிந்த விஷயமாக இருந்தது. அதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

விழா மாலை 4 மணி முதல் 10 மணி வரை திட்டமிட்டப்பட்ட நிலையில் சற்று முடிய தாமதமாகி விட்டது. அதனால், ரஜினி, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது சில பகுதிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நேரமின்மை காரணமாக சென்றனர். அந்த பகுதியில் இருக்கும் புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT