28 கமல் நடிப்பில் இந்தியன் 2: 28 ஆண்டுகளுக்குப் பிறகு மனிஷா கொய்ராலா மீண்டும் கமலுடன் இணைகிறார்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் குறித்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
கமலின் “விக்ரம்” படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை.
எனவே, “இந்தியன் 2” படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வருகிற ஜூன் மாதம் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், விவேக், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து இன்னும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை நடிக்க வைப்பதற்காக ஷங்கர் ரகசியமாக ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார்.
அதாவது, ஷங்கரின் மூத்த மகள் திருமணத்திற்காக மும்பையில் இருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வரும் போது, பழைய விஷயங்களில் ஆர்வம் காட்டி அதையும் அடுத்த கட்ட வாய்ப்புக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார்.
அப்படித்தான் 28 வருடங்களுக்கு முன் கமலுடன் இணைந்து நடித்த ஹீரோயினை பார்த்து மறுபடியும் “இந்தியன் 2” படத்திற்கு நடிக்க கமிட் பண்ணி இருக்கிறார்.
அவர் வேறு யாரும் இல்லை, சங்கர் இயக்கத்தில் நடித்து ஹிட் கொடுத்த மனிஷா கொய்ராலா தான்.
தற்போது இவரையும் “இந்தியன் 2” படத்திலே இணைப்பதற்காக சில முக்கியமான காட்சிகள் இடம் பெறப் போகிறது.
அத்துடன் சங்கர் கேட்டதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மனிஷாவும் அவருடைய கால்ஷீட் கொடுத்து விட்டார்.
இவர்களுடைய காம்போவில் வந்த “முதல்வன்” மற்றும் “இந்தியன்” படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து “இந்தியன் 2” படமும் சாதனை படமாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
