நடிகர் சூர்யா கடைசியாக “சிங்கம் 2” படத்திற்கு பிறகு ஒரு டஜன் படங்கள் தோல்வியடைந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போல கம்பேக் கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கங்குவா” படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர்.
“கங்குவா” படத்தின் டீசர் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் என படத்தின் தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும், “சூரரைப் போற்று” மற்றும் “ஜெய் பீம்” படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தால், சூர்யா பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூர்யாவும் ஜோதிகாவும் தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் நிலையில், ஜோதிகா நடித்த “ஷைத்தான்” படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ஜோதிகாவின் வளர்ச்சியை பார்த்து, “கங்குவா” படத்தின் மூலம் சூர்யா பான் இந்தியா வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாகுபலி படம் போல “கங்குவா” வெற்றி பெறுமா? அல்லது “அண்ணாத்த” போல தோல்வியடையும்தா? என்பதை டீசர் வெளியானதும் தெரிந்துவிடும்.
