தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குநராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம், வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பேசியதாவது:
“லால் சலாம் படத்தின் அப்டேட்களை வெளியிட்டால், ரசிகர்களிடமிருந்து வரும் ரிப்ளைகள் எல்லாம், ‘தலைவர் 171 படத்தின் அப்டேட்கள் போடுங்க, விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் போடுங்க’ என்று வரும். இதைப் பார்த்தால், நம் படம் அவர்களின் லிஸ்ட்டில் இல்லை என்று தோன்றும்.
ஆனால், படம் உருவான பிறகு சொல்லுகிறேன். என் படம் உங்களுடைய லிஸ்ட்டில் இருக்கும்” என்று கூறினார்.
EXCLUSIVE :#AK aka #THALA The Brand 🔥🔥🔥🔥😎
At #LALSALAAMAUDIOLAUNCH#AjithKumar #VidaaMuyarchipic.twitter.com/ukkV760TBf
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) January 26, 2024
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. லால் சலாம் படம் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
.@ash_rajinikanth speech! #Thalaivar171 #VidaaMuyarchi #LalSalaamAudioLaunch pic.twitter.com/0wFror3tOo
— Ragav シ︎ (@Ragav_Tweetz) January 27, 2024
