Wednesday, October 28, 2026

விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது

நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், விஜயகாந்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் விஜயகாந்த் படத்திற்கு நடிகர், நடிகைள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு அவரது நினைவுகள் குறித்து பேசுகிறார்கள். இறுதியில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறார்கள். மதுரையில் விஜயகாந்திற்கு சிலை, சென்னையில் உருவாகும் புதிய திரைப்பட நகருக்கு விஜயகாந்த் பெயர் என பல கோரிக்கைகள் வைக்க இருக்கிறார்கள். இதற்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT